டெங்கு ஒழிப்பு: முதல்வரின் உத்தரவுகள்
Posted: Fri,13 Oct 2017 08:07:28 GMT
டெங்கு ஒழிப்பு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் மர்ம காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில், தமிழக அரசின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்துக்குபின் முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள் வெளியிடப்பட்டன. அந்த உத்தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன”
அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர்கள் தலைமையிலும், சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், வரும், 15 நாட்களுக்கு, டெங்குகொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள, நீர் தேங்கும் இடங்கள், குப்பை, கட்டுமானப் பகுதிகள் போன்றவற்றில், முழுமையாக துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும்
இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக, சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட வேண்டும். இக்குழு உறுப்பினர்கள், தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், துப்புரவு பணி நடைபெறுவதை கண்காணித்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இப்பணிகளை கண்காணிப்பதற்காக, கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும், கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில், இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
சுத்தம் செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப் பட்டால், அந்த இடத்தின் உரிமையாளர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அனைத்து மருத்துவமனைகளிலும், கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர்
இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, தேவைகளை நிறைவேற்றவும், ஒவ்வொரு மாவட்டத்திற் கும் நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள், உடனடியாக மாவட்டத்திற்கு சென்று, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • Share
  • 0 Comment(s)