காந்தியின் மரணம் தற்போதைய அரசியலாகிவிட்டது
Posted: Fri,13 Oct 2017 07:56:04 GMT
அரசியல் என்பதே மரண வியாபாரம் என்று ஆகிவிட்டது. மக்கள் கொத்துக்கொத்தாக சாவதை வைத்து ஒரு கட்சி அரசியல் செய்கிறது, அதே மரணங்களை வைத்து வேறு விதமாக மற்றொரு கட்சி அரசியல் செய்துவருகிறது.
இப்படியான காட்சிகளுக்கு இடையே 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காந்தியின் கொலையை வைத்து இரு கட்சிகள் தற்போது அரசியல் செய்துவருகின்றன.
காந்தியை கொன்றது இந்து அமைப்புகள் என்று காங்கிரஸ் ஒருபுறம் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க, பாஜகவின் அமைச்சர் உமாபாரதியோ காந்தியின் கொலையால் லாபம் அடைந்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெரித்துள்ளார். இது குறித்த தன்னுடைய அற்புதமான கருத்தை உதிர்த்திருக்கும் உமாபாரதி, “மகாத்மா காந்தி கொலையால் பாதிக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கம் தான்; ஆனால் அதிக பலன் அடைந்தது காங்கிரஸ்; ஏனெனில், சுதந்திரத்துக்கு பின், காங்கிரசை கலைத்துவிடும்படி, மகாத்மா காந்தி கூறினார். அவர் கொலை செய்யப்பட்டதால், காங்கிரஸ் கலைக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் காந்தி கொலையால் பெருமளவு ஆதாயம் அடைந்தது காங்கிரஸ்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)