ஆளும் கட்சிக்கு வளைந்து கொடுக்கும் தேர்தல் ஆணையம்
Posted: Fri,13 Oct 2017 07:44:56 GMT
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கான சடமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேதியை அறிவித்துள்ள, தேர்தல் ஆணையம், குஜராத் சட்டமன்ற தேதி பின்ன அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இச்செயல் குறித்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் குஜராத் தலைநகர் காந்திநகரில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் மோடி பல முக்கிய சலுகைகளை அறிவிக்க உள்ளார். இதற்கு அனுமதி அளிப்பதற்காகவே தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, “தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டிய 2 மாநில தேர்தலில் ஒன்றிற்கு மட்டும் தேதியை அறிவித்து விட்டு, ஒன்றிற்கு அறிவிக்கவில்லை. மோடி வருகைக்காக தான் இந்த தாமதமா என்ற சந்தேகம் எழுகிறது. இது துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)