தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி நாயகி
Posted: Fri,13 Oct 2017 03:50:27 GMT
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஷாலினி, இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் கொண்டாடும் நாயகியாக உருவெடுத்துள்ளார்.
அதே சூட்டில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற 100% காதல் படத்தின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த ஷாலினி, தான் நடிக்க வந்தது குறித்து கூறும்போது, “ஜபல்பூர்தான் சொந்த ஊர். கல்வி குடும்பம் எங்களுடையது. நிறைய படிக்கணும், ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளா வரணுங்றதுதான் என்னோட ஆசையாக இருந்தது. ஆனால் பிரண்ட்சுங்கதான் நீ அழகா இருக்க நாடகத்தில் ஏன் நடிக்க கூடாது என்றார்கள். அதையும் பார்த்து விடுவோம் என்று நாடகத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது. எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினேன்.
பிறகு டி.வி.நிகழ்ச்சிகள் பண்ணினேன். அப்பகூட நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைக்கல. நெட்டுல என்னோட போட்டோவை பார்த்துவிட்டுதான் சந்தீப் ரெட்டி சார் அர்ஜுன் ரெட்டியில் வாய்ப்பு கொடுத்தார். அந்த ஒரு படம் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். தமிழ் சினிமா எனக்கு ரொம்ப புதுசு. இப்பதான் தமிழ் படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். தமிழ் பாட்டும் கேட்க ஆரம்பிச்சிருக்கேன். தமிழ் கத்துக்க ஆர்வமா இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)