அதிரடி அண்ணாதுரை
Posted: Fri,13 Oct 2017 03:49:58 GMT
புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி வரும் படம் அண்ணாதுரை. விஜய் ஆண்டனி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அண்ணா மற்றும் துரை என்ற இரு பாத்திரங்களில் வேறுபாட்டிற்காக தாடி வைத்து நடித்துள்ளார்.
இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, வெற்றிகரமான நாயகனாக மாறி இருந்தாலும், தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையமைத்து வருகிறார். இப்படத்திலு படத்தொகுப்பையும் தானே செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும், இப்படத்தின் குறு முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. அதிரடியாக இருக்கும் இக்குறு முன்னொட்டம், ஒரே நாளில் 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது
  • Share
  • 0 Comment(s)