சமந்தா பெயர் மாற்றம்
Posted: Fri,13 Oct 2017 03:49:27 GMT
சென்னை பல்லாவரத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்த சமந்தா, மாஸ்கோவின் காவிரி படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெளிவர தாமதம் ஆகவே. அடுத்து அவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய வெற்றி பெற்று, அவருக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல இடத்தை பெற்றுக்கொடுத்தது.
அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என அவர் நடித்த படங்கள் வெற்றிகளை குவிக்க முன்னணி நடிகை ஆனார். சமந்தா நடிப்பில் வெளியான முதல் படமான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில், அவருக்கு ஜோடியாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டது.
ஏழு வருட காதலுக்குப்பிறகு கடந்த 6ம் தேதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சமந்தா ரூத் பிரபு என்ற தன் பெயரை மாற்றி, நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை இணைத்து சமந்தா அக்கினேனி என்று மாற்றியுள்ளார். அவருடைய ட்விட்டர் தளத்தில் சமந்தா அக்கினேனி என்று மின்னிகொண்டிருக்கிறது சமந்தாவின் பெயர்.
  • Share
  • 0 Comment(s)