சூர்யாவை தடுத்த ஊர் பொது மக்கள்
Posted: Fri,13 Oct 2017 03:48:58 GMT
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நீண்ட நாட்களாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அதன்படி நேற்று தஞ்சாவுருக்கு அருகில் இருக்கும் திருவையாறு படித்துறையில் படப்பிடிப்பு நடத்த காவல்துறை அனுமதி பெறப்பட்டிருந்தது.
ஆனால் படப்பிடிப்பு குழுவினர் அங்கு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள், படித்துறையில் பூஜை புனஸ்காரங்கள் செய்து வந்தனர். அவர்கள் படப்பிடிப்புக்கு ஒதுங்கி வழிவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர், “அனுமதி பெற்றிருந்தாலும், வழக்கமாக நடக்கும் பூஜை போன்ற விசயங்களை தடை செய்ய முடியாது, எனவே பூஜைகள் இல்லாத ஒரு நாளில் படப்பிடிப்பு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அங்கு படப்பிடிபு நடத்த முடியாமல் திரும்பியுள்ளது படக்குழு.
  • Share
  • 0 Comment(s)