சின்ன நயன்தாராவுக்கு திருமணம்
Posted: Fri,13 Oct 2017 03:48:29 GMT
பிரலப கன்னட நடிகர் சுந்தர் ராஜுவின் மகள் மேக்னாராஜ், இவர் 2009ம் ஆண்டு வெளியான பெண்டு அப்பாராவு ஆர்.எம்.பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
2010ம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் 25ம் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
நயன்தாரா பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் அறிமுகமான இவர் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருந்ததால் இவரை லிட்டில் நயன் என்று அழைத்தார்கள்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஏறக்குறைய 50 படங்களில் நடித்திருக்கும் இவருக்கும், கன்னட நடிகர் சிரஞ்சீக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் இரு வீட்டாரால் அங்கீகரிக்கப்பட்டு திருமணத்தில் முடிவடைய உள்ளது.
மேக்னா, தன்னுடைய திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தன் பிறந்தநாளான அக்டோபர் 17ம் தேதி அறிவிக்கவிருக்கிறார்.
  • Share
  • 0 Comment(s)