ராமாராவை வைத்து சர்ச்சையை கிளப்புகிறாரா ராம் கோபால் வர்மா
Posted: Thu,12 Oct 2017 05:13:19 GMT
சர்ச்சைக்குரியவற்றை பேசுவது, சர்ச்சைக்குறிய விசயங்களை படமாக எடுப்பது என சர்ச்சையையே தன் வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகும் படம் லட்சுமியின் என்.டி.ஆர்.
ஆந்திராவின் சூப்பர் ஸ்டாராக இருந்து, முதலமைச்சராக உயர்ந்த என்.டி.ராமாராவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படம், ராமாராவின் அரசியல் வாழ்க்கையை தொடாமல் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்லும் கதையாக உருவாகவிருக்கிறது.
ராமாராவ் மற்றும் அவருடைய வயதான காலத்தில் மணந்து கொண்ட லட்சுமி சிவ பார்வதி ஆகியோர் இடையேயான உறவைச்சொல்லும் படம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் ராமாராவ் வேடத்தில் அவருடைய மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான பாலையா நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராமராவின் மகனே அவருடைய பாத்திரத்தில் நடிப்பதால், ராம் கோபால் வர்மாவின் வழக்கமான சர்ச்சைகள் ஏதும் இதில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)