மம்மூட்டி நடிக்கும் இரட்டை மொழி படம் ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’ டிசம்பர் வெளியீடு
Posted: Thu,12 Oct 2017 05:12:20 GMT
மம்முட்டி நடிப்பில், சம்தத் சைனுதீன் இயக்கத்தில் தயாராகி உள்ள படம் ’ஸ்ட்ரீட் லைட்ஸ்’. வித்தியாமனான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகி என்று யாரும் இல்லையாம். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள பதிப்புகளுக்கு மம்மூட்டி தவிர, மற்ற நடிகர்கள் மாறுகிறார்கள். அதாவது தமிழ் பதிப்பில் மொட்டை ராஜேந்திரன், , மனோபாலா, பிளாக் பாண்டி என தமிழ் நடிகர்களும், மலையாள பதிப்பில் பிரபல மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர்.
முழு நீள ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது.
  • Share
  • 0 Comment(s)