இரண்டாம் பாகம் படங்கள்
Posted: Thu,12 Oct 2017 05:11:07 GMT
பேய் சீசன், காதல் பட சீசன் போல இரண்டாம் பாக சீசன் தற்போது தமிழ் திரையுலகில் நடந்து வருகிறது.
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது வெகு காலமாக இருந்து வந்தாலும், தற்போதுதான் ஒரே நேரத்தில் பல படங்களில் இரண்டாம் பாகங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக மாபெரும் வெற்றிப்படமான கல்யாண ராமன் படம், ஜப்பானில் கல்யாணராமன் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது
சிங்கம் மற்றும் காஞ்சனா படங்கள் மூன்றாவது பாகத்தை முடித்துவிட்டன. முனி படத்தின் மூன்றாம் பாகம் என்றே காஞ்சனா 2 விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது உருவாகிவரும் காஞ்சனா 3, முனி 4வது பாகம் ஆகும்.
பில்லா 2, சென்னை 28 - 2 பாகுபலி 2, பசங்க 2, அரண்மனை 2, கோ 2, டார்லிங் 2 , பீட்சா 2, ஜெய்ஹிந்த் 2, நான் அவன் இல்லை 2, , ஜித்தன் 2 என பல படங்கள் சமீப காலங்களில் வெளியாகியுள்ல நிலையில். தற்போதைய நிலவரப்படி விஸ்வரூபம் 2, 2.0, கலகலப்பு 2, இந்தியன் 2, களவாணி 2, ராஜதந்திரம் 2, சதுரங்க வேட்டை 2 , த்ரிஷா இல்லன்னா நயன்தாரா 2, சண்டக்கோழி 2, இம்சை அரசன் 24ம் புலிகேசி என பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன.
  • Share
  • 0 Comment(s)