50 சதவீத ஒதுக்கீடு கேட்டு குரல் கொடுக்கும் ரம்யா நம்பீசன்
Posted: Thu,12 Oct 2017 02:41:17 GMT
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் சங்க தேர்தலில், நடிகைகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என ரம்யா நம்பீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களுக்கான WCC என்ற அமைப்பில்; மலையாள நடிகைகள் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் பெண்களுக்கு 5௦ சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று குரல் உயர்த்தியுள்ளார் ரம்யா நம்பீசன்.
இது தொடர்பாக பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள ரம்யா நம்பீசன், “ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப்பாதி பெண்கள் இருந்தால் தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இதுகுறித்து, வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும்.
திலீப்பின் ராம்லீலா படத்தை தடுக்காதீர்கள் என மஞ்சு வாரியார் சொன்னது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கியது சிலர் சொல்வது போல மம்முட்டி, பிருத்விராஜை சந்தோஷப்படுத்த எடுத்த தனிப்பட்ட முடிவு ஒன்று அல்ல. அது அவர்கள் பார்வையாக இருக்கலாம்.. ஆனால் பொறுப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் அது. ஒருவேளை திலீப் குற்றமற்றவர் என நிரூபணமானால், அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அந்த தீர்மானத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)