எல்லை தாண்டும் தனுஷ்
Posted: Thu,12 Oct 2017 02:32:02 GMT
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் தனுஷ், தமிழ் திரையுலகின் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரு தயாரிப்பாளராக மாநில எல்லைகளை தாண்டியுள்ளார். மலையாளத்தில் , 'தரங்கம்' மற்றும் 'மரடோனா' ஆகிய இரண்டு படங்களை தயாரித்தார். இதில் ‘தரங்கம்’ படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக மரடோனா படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் கன்னட திரையுலகிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து, தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் மூலம் கன்னட படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார்.
தனுஷ் தயாரிக்க்கும் கன்னடபடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆபரேசன் அலமேலம்மா’ படத்தில் நாயகனாக நடித்த ரிஷி நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் தயாரிப்பாளரக, தனுஷ் கால்பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)