மதுவிலக்குக் பொய்யா? ஸ்டாலின் கேள்வி
Posted: Thu,12 Oct 2017 01:31:04 GMT
டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளின் விலையை ஏற்றியுள்ளது அரசு, இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், “டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, அமைச்சர்கள் மாற்றியதாக புகார் எழுந்துள்ளது. முறையான விசாரணை நடந்தால், அனைத்தும் வெளியே வரும். இந்த ஆட்சி நடக்கும் வரை, அதற்கான வாய்ப்பில்லை.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, கோரிக்கை வைத்திருந்தோம். 'டெங்கு' பிரச்னையில், வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான், உண்மை வெளிவரும்.'அண்ணாதுரை, இன்று இருந்திருந்தால், அவர் பா.ஜ.,வில் சேர்ந்திருப்பார்' என, பா.ஜ., பொதுச்செயலர், முரளிதர் ராவ் தெரிவித்திருக்கிறார். அண்ணாதுரையின் பெயரைப் பயன்படுத்தி, அரசியல் செய்யும் நிலை, பா.ஜ.,வுக்கு வந்து விட்டது.
மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள போது, அரசின்வருவாயை உயர்த்த, மதுபானங்களின் விலையை, 12 ரூபாய் வரை உயர்த்த, அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 'படிப்படியாக, மதுபானக் கடைகளை மூடுவோம்; மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம்' என கூறியவர்கள், இப்படி அறிவித்துள்ளனர். இது, தமிழகத்தில், எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி நடக்கிறது என்பதற்கு, எடுத்துக்காட்டு” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)