வீடு வாங்குவதற்கும் ஜிஎஸ்டி வருகிறது
Posted: Thu,12 Oct 2017 01:30:25 GMT
அமெரிக்கா சென்றுள்ள இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அங்கு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் உரையாற்றியபோது, “இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை இன்னும் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது.
சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)