மித்தாலிக்கு சச்சின் கொடுத்த பரிசு
Posted: Thu,12 Oct 2017 01:29:54 GMT
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில்; இந்திய பெண்கள் அணியின் தலைவர் மித்தாலி ராஜ். சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய மித்தாலி ராஜ், “சச்சின் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் தான் எனக்கு பல முறை உதவி இருக்கிறது. நான் 6000 ரங்களைக் கடந்த போது சச்சின் என்னை அழைத்து பேசினார். அப்போது அவர் என்னை பாராட்டியது தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறது" என்று கூறினார்.
இந்த நிலையில் அவர் பெண்கள் கிரிக்கெட்டின் வேர்ல்ட் கப் பைனலுக்கு சென்றதன் ரகசியம் பற்றி பேசினார் , "நான் 6000 ரன்கள் எடுத்த போது சச்சின் டெண்டுகள் எனக்கு ஒரு பேட் கிஃப்ட் செய்திருந்தார். அந்த பேட்டை வைத்துதான் நான் அதற்குப் பின் பல ரன்கள் குவித்தேன் அதன் மூலம் தான் நான் உலகின் அதிக ரன்கள் எடுத்த பெண் கிரிக்கெட் வீரராக இருக்கிறேன். அது எனக்கு மிகவும் லக்கியான் பேட்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)