அண்ணாவை இழுக்கும் பாஜக
Posted: Thu,12 Oct 2017 01:29:25 GMT
திருநெல்வேலியில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில்; அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சில அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர்.
இக்கூட்டத்துக்கு தலைமை ஏற்று பேசிய கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், “கருணாநிதி இல்லாமல் ஸ்டாலினால் அரசியலை செய்ய முடியவில்லை. இதனால் தான் அவர் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார், ஆனால் ஸ்டாலின் ஒன்றை மறந்து விடக்கூடாது உத்திரப்பிரதேச மாநில தேர்தல் தோல்விக்கு ராகுல் தான் காரணம்” என்று தெரிவித்தார்.
மேலும், “அதிமுகவும், திமுகவும் 1967 முதல் 2017 வரை தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. ஆனால் இது வரை ஊழைலைத் தவிர எதையும் செய்யவில்லை. நான் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன், தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் வரிகளை உங்களில் யார் பின்பற்றுகிறீர்கள். பாஜகவும் ஊழலற்ற தலைவர்களும் மட்டுமே திருவள்ளுவரை பின்பற்றுகின்றனர்.
பேரறிஞர் அண்ணா ஒரு வேளை திரும்பி வந்தால் கூட அவர் பாஜகவில் தான் இணைவார். நிச்சயமாக அவர் திமுகவை தேர்வு செய்யமாட்டார். ஏனெனில் பாஜக மட்டுமே ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சியை தமிழக மக்களுக்கு அளிக்கும்” என்றும் தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)