ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை
Posted: Thu,12 Oct 2017 01:28:48 GMT
தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் சற்றே ஏற்றம் கண்ட நிலையில், இன்று முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டது. பிற்பகலுக்கு மேல் இந்திய பங்கு சந்தி அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிப்டி 10,100 புள்ளிகளை நெருங்கியுள்ளது
சென்செக்ஸ் 348.23 புள்ளிகள் உயர்ந்து 32,183.22 புள்ளிகளாகவும், நிப்டி 113.70 புள்ளிகள் உயர்ந்து 10,098.50 புள்ளிகளாகவும் உள்ளன. ரிலையன்ஸ், ஹிண்டல்கோ, பார்தி இன்போடெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகள் கடும் சரிவையும் சந்தித்துள்ளன.
  • Share
  • 0 Comment(s)