ராகுல் கருத்துக்கு ஷா நவாஸ் கண்டனம்
Posted: Thu,12 Oct 2017 09:46:57 GMT
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் அதிகம் இல்லை என்ற ரீதியில் சில கருத்துக்களை, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், “பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இரண்டையும் புரிந்து கொள்ள ராகுல் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருக்கும் பெண்கள் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.,வில் உள்ள பெண் தலைவர்களைபார்த்து, காங்., துணை தலைவர் ராகுல் பயப்படுகிறார். அதனால் தான், பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும், பெண்களை இழிவுபடுத்துவதாக கூறுகிறார். காங்கிரசை கலைக்க வேணடும் என்ற மகாத்மா காந்தியின் ஆசையை, ராகுல் நிறைவேற்றுவார்.” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)