சென்னை ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
Posted: Thu,12 Oct 2017 09:46:16 GMT
கடந்த சில வாரங்களாக தென்மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன.
அந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 10 மில்லியன் கனஅடி அதிகரித்து 150 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரிக்கு தற்போது 121 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 318 மில்லியன் கனஅடியாகவும், புழல் ஏரியில் 354 மில்லியன் கனஅடியாகவும், சோழவரம் ஏரியில் 81 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத அளவுக்கு சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
  • Share
  • 0 Comment(s)