”ராகுல் காந்தி பிரதமரானால் ஜிஎஸ்டி வரி குறையும்”, ராஜ் பாபர் பேச்சு
Posted: Thu,12 Oct 2017 09:45:43 GMT
உத்தரபிரதேச மாநிலம் பேரெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர், “கட்சியின் துணைத் தலைவராக உள்ள ராகுல் பிரதமரானால் ஜிஎஸ்டி குறையும். வரி விகிதம் 18 சதவீதத்திற்கும் கீழாகவே இருக்கும். சிறு தொழில்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் மற்றும் ஜிஎஸ்டியும் பாதுகாப்பான வகையிலேயே இருக்கும். பா.ஜ., தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியை எந்த அளவிற்கு தவறாக கொண்டு சென்றுள்ளது என்பது ராகுல் பிரதமரானால் மட்டுமே வெளிப்படும். நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல பா.ஜ.,வை வேருடன் அகற்ற வேண்டும்.
பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன. காங்கிரஸ் அதனை வெளிக் கொண்டு வந்து, மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியில் தொண்டர்கள் அனைவரும் இறங்க வேண்டும். பா.ஜ., தலைவர்கள் பரப்பி வரும் பொய்களையும், நாடகங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)