”முதல்வருடன் மனவருத்தம் இல்லை”, ஓபிஎஸ் பேட்டி
Posted: Thu,12 Oct 2017 09:45:08 GMT
டெல்லியில் மோடியை தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்கும்பின் செய்தியாளார்களை சந்தித்த பன்னீர்செல்வம், “பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முதல்வர் பழனிசாமி தமிழக வளர்ச்சிகள் குறித்த கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பினார். அதை பிரதமரிடம் கொடுத்துள்ளேன். தமிழக மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிலக்கரி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார்.
மேலும், “என்னை தவிர பிற யாரையும் சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார் என்பது மீடியாக்களின் கருத்து. தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியுடன், மத்திய மின் துறை அமைச்சரை மதியம் சந்திக்க உள்ளோம்” என்றும் தெரிவித்துள்லார்.
முதல்வருடன் மனவருத்தம் என்று வெளியாகியுள்ள செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முதல்வர் பழனிசாமியுடன் எந்த மன வருத்தமும் இல்லை. முதல்வர் பழனிசாமி அனைவருடனும் கலந்து ஆலோசித்து தான் செயல்பட்டு வருகிறார்.” என்று பதிலளித்தார்.
  • Share
  • 0 Comment(s)