தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Posted: Thu,12 Oct 2017 09:44:40 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திரு பாலச்சந்திரன், “மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)