ஸ்ருதிஹாசனுக்கு திருமணமா?
Posted: Wed,11 Oct 2017 05:47:53 GMT
தமிழ், தெலுங்கு, இந்தி என பரபரப்பாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், சமீப காலமாக புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக விருந்த சங்கமித்ரா படத்தில் இருந்து விலகியபின் வேறு எந்த படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
ஸ்ருதிஹாசன், சில மாதங்கள் ஓய்வை விரும்புகிறார் என்றும், இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தவிருக்கிறார் என்றும் அதன் காரணமாகவே அவர் சில மாதங்களாக திரைப்படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன், திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் அதனால்தான் புதிய படங்களில் நடிக்க மறுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த் ஒருவரை ஸ்ருதி காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்யவிருப்பதால்தான் தற்சமயம் திரைப்படங்களில் இருந்து விலகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் எது உண்மை காரணம் என்று தெரியவில்லை
  • Share
  • 0 Comment(s)