காஜல் அகர்வாலுக்கு சாதகமான தீர்ப்பு
Posted: Wed,11 Oct 2017 05:47:25 GMT
நடிகை காஜல் அகர்வால், ஒரு தேங்காய் எண்ணை விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த தேங்காய் எண்ணை நிறுவனம் ஒப்பந்த காலத்தை தாண்டியும், அந்த விளம்பரத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வந்தது.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காஜல் அகர்வால், அத்துடன் தன்னை கேட்காமல் விளம்பரத்தை ஒளிபரப்பியதற்காக, தனக்கு 2.5 கோடி தரவேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டிருந்தார்.
ஆனால் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "எண்ணை நிறுவனத்திடம் அந்த விளம்பரத்தின் காப்புரிமை உள்ளது. காப்புரிமை சட்டத்தின்படி அந்த நிறுவனம் அந்த விளம்பரத்தை 60 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்" என்று காஜல் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து காஜல் அகர்வால் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ”எண்ணை நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. எனவே இந்த வழக்கு முடியும் வரை தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கான தடையை விதித்துள்ளது உயர் நீதிமன்றம்.
  • Share
  • 0 Comment(s)