ஜெய் கொடுத்த விளம்பரம்
Posted: Wed,11 Oct 2017 05:46:54 GMT
புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் பலூன். இப்படத்தை 70ஏஎம் எண்டர்டெயின்மெண்ட், ஃபார்மர்ச் மாஸ்டர் ப்ளான் புரொடெக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
வெளியீட்டுக்கு தயாராக உள்ள படத்துக்கு விதவிதமான விளம்பரங்களை செய்து வருகிறது படக்குழு. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில், பலூன் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படத்தின் நாயகி அஞ்சலி, பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருந்தார். கையில் பல பலூன்களை கொண்டு சென்ற அவர், பலூன் படம் குறித்த முன்னெடுப்புகளை செய்தார்.
திட்டமிட்டபடி பலூன் படத்தின் முன்னெடுப்பு வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நாயகன் ஜெய், மது போதையில் விபத்து ஏற்படுத்தி, ஜாமீனில் வெளிவரமுடியான பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் அளவுக்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு மேல் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இது படத்தின் விளம்பரத்துக்கு பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
  • Share
  • 0 Comment(s)