அமைச்சர் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை
Posted: Wed,11 Oct 2017 02:33:21 GMT
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட சற்று அதிகமாகவே பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டைப்போல் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் செய்ய வேண்டியவை குறித்து அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இங்கே:
கடந்த நவம்பர்-2015ல் ஏற்பட்ட பெருமழையினால் நீர்தேக்கம் ஏற்பட்ட இடங்களில், நீண்டநேரம் நீர்தேங்கும் இடங்கள் கண்டறிந்து இம்முறை அங்கு மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மழைநீர் வடிகால்கள், பெரியகால்வாய் மற்றும் நதி முகத்துவாரங்களை சென்றடையும் வண்ணம் இணைப்பு வழங்கப்பட்டு மழைநீர் தேங்காமல் தங்குத் தடையின்றி செல்ல வழிவகை செய்யபட வேண்டும்.
ஆகாய தாமரை அகற்றும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். சுரங்க பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற உயர் அழுத்த மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மழைக்காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற போதிய மரம் அறுக்கும் கருவிகள் அனைத்து மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு பள்ளிக் கட்டடங்கள், சமுதாய கூடங்கள், பிற பொது கட்டடங்கள்தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும். தெரு மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டால், அவற்றை உடனடியாக சரி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்.
அளவுக்கு மீறி தேங்கும் மழைநீரை அகற்ற 15 மண்டலங்களிலும் தேவையான அளவிற்கு பம்பு செட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா? மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் 25 முதல் 50 சிசி வரையிலான மோட்டார்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா?அதன் விவரம்.
அனைத்து மண்டலங்களிலும் ஜெனரேட்டர் பொருத்திய ஒரு உயர் மின் விளக்கு கோபுரம் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். பல்வேறு துறைகளின் மீட்புக் குழுக்கள் மற்றும் தீயணைப்பு துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளனவா?
கடந்த முறை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளிட்ட தேவைப்படும் இடங்களில் போதிய அளவில் படகுகள் மற்றும் திறன் வாய்ந்த படகு இயக்குபவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா?
24 நேரமும் இயங்கும் வெள்ளகட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளதா? இதற்கென தனியாக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஒரு துணை ஆணையர் தலைமையில் கண்காணிக்கப்பட வேண்டும்.
தேவைப்படும் நிகழ்வில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் இராணுவத்தினரை அழைக்க வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும்.
நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில், மருத்துவர்கள், மருத்துவ குழுக்கள்மற்றும் மருந்துகள் தேவையான அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனவா?
நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும். சென்னை குடிநீர், 108 அவசர மருத்துவ ஊர்தி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படவேண்டும்.
கொசுமற்றும் தொற்றுநோய்களைகட்டுப்படுத்த, போதிய மலேரியா தொழிலாளர்களுடன், அழுத்த தெளிப்பான்கள், கையினால் இயக்கும் புகை அடிக்கும் கருவிகள் மற்றும் வாகன புகை அடிக்கும் கருவிகள் மற்றும் பூச்சி மருந்துகள் தயார் நிலையில் உள்ளனவா? அவசர கால மருந்துகள் போதுமானஅளவில் கையிருப்பில் உள்ளதா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான பொது சமையற் கூடங்களும் மற்றும் பொது மக்களை தங்கவைக்கவும் நிவாரண மையங்களும் தயார் நிலையில் உள்ளனவா?
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் உணவு அம்மா உணவகங்களிலிருந்தும் போதுமான அளவில் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன
  • Share
  • 0 Comment(s)