பிரியாணிக்கான கத்தரிக்காய் தொடுகறி
Posted: Wed,11 Oct 2017 02:32:04 GMT
பிரியாணி என்றதும் நினைவுக்கு வருவது அதற்கான தொடு கறிகளான தயிர் வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் தொடுகறி. சாதாரண கத்தரிக்காய் கொத்சு தயாரிக்கும் முறைக்கும் பிரியாணி தொடுகறி செய்முறையும் சற்றே வித்தியாசமானது. பிரியாணி கத்தரிக்காய் தொடுகறி செய்முறை இங்கே
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – ½ கிலோ
வேர்கடலை – 25 கிராம்
எள் – 25 கிராம்
மிளகு – அரை தேனீர் கரண்டி
சீரகம் – அரை தேனீர் கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் தூள் – 2 தேனீர் கரண்டி
மல்லி தூள் – 4 தேனீர் கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கடுகு – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையாண அளவு
நல்லெண்ணை – 100 மில்லி
செய்முறை
வேர்கடலை மற்றும் எள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். (ஒன்றாக வறுத்தால் எள் கறுகிவிடும் வாய்ப்பு இருக்கும் அதனாலேயே தனித்தனியாக வறுக்க வேண்டும்.)
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை உரித்து பொடியா வெட்டிக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்
வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். கத்தரிக்காய் அரை வேக்காடு வெந்ததும், கரைத்த புளியை ஊற்றவும், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அரைத்து வைத்துள்ள கடலை, எள் பொடியை சேர்த்து கொதிக்கவிடம். சுவையான கத்தரிக்காய் தொடுகறி தயார்.
  • Share
  • 0 Comment(s)