பாஜகவுக்கு செல்கிறாரா முகுல் ராய்?
Posted: Wed,11 Oct 2017 02:30:16 GMT
மாற்று கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை விரைவு படுத்தியுள்ளது பாஜக. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணாவை தங்கள் பக்கம் இழுத்த பாஜக, தற்போது திரிணாமுல் கட்சியை சேர்ந்த முகுல்ராய் அவர்களை இழுத்துள்ளது.
சமீப காலமாக பாஜக பக்கம் சாய்ந்து வரும் திரிணாமுல் கட்சியின் நாடாளுமன்ர உறுப்பினர் முகுல் ராய், திடீரென கட்சிப்பதவி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி, ஆகிய இரண்டையும் ராஜினாமா செய்துள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங். ராஜ்யசபா எம்.பி. முகுல் ராய், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து தற்காலிக நிக்கம் செய்யப்பட்டார், இந்நிலையில் அவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், ராஜ்யசபா எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். விரைவில் பா.ஜ.வில் ஐக்கியமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முகுல் ராய், “கனத்த இதயத்துடனும், மன வேதனையுடனும் ராஜினாமா செய்கிறேன். எம்.பி பதவியை ராஜினாமா செய்ததற்காக கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் சமர்பித்துவிட்டேன். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டார்கள். எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் ” என்று தெரிவித்துள்ளார். இவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)