சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்த தினகரன்: ஜெயக்குமார் கண்டனம்
Posted: Wed,11 Oct 2017 02:29:43 GMT
18 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது தொடர்பாக, சட்டப்பேரவை தலைவர் தனபாலை எச்சரிக்கும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார் டிடிவி தினகரன்.
தினகரனின் இச்செயலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சபாநாயகரை சும்மாவிட்மாட்டேன். தக்க பாடம் புகட்டுவேன் என தினகரன் பேட்டியளிக்கிறார், இது அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியுள்ளது. சபாநாயகரை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியையும் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)