”டெங்கு மருத்திலும் ஊழல்”, ஸ்டாலின் குற்றச்சாட்டு
Posted: Wed,11 Oct 2017 12:11:37 GMT
தமிழகத்தில் டெங்கு மரணங்கள் பெருகி வரும் நிலையில், டெங்கு கொசுவை ஒழிப்பதற்காக வாங்கப்பட்ட மருத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அமைச்சர், விஜயபாஸ்கர்,'டெங்கு' உள்ளிட்ட விவகாரங்களில், அக்கறை காட்டுவதில்லை. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அரசு காட்டும் ஆர்வத்தை,டெங்கு பாதிப்புகளிலும் காட்ட வேண்டும். கொசு மருந்து அடிப்பதிலும், இவர்கள் ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது.
இதற்கு எல்லாம், தலைமை செயலரே பொறுப்பேற்று, பதிலளிக்க வேண்டும். அரசு வேலைகளில், அவர் அக்கறை காட்ட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)