இந்திய அணி தோல்வி
Posted: Wed,11 Oct 2017 12:10:02 GMT
தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவரில், 118 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, 15.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளதால், ஐதராபாத்தில் நடக்கவிருக்கும் மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே கோப்பையை வெல்லும். இதன் காரணமாக மூன்றாவது போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • Share
  • 0 Comment(s)