”யோகாவை மதத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம்”, வெங்கய்யா நாயுடு பேச்சு
Posted: Tue,10 Oct 2017 03:03:49 GMT
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச யோகா மாநாட்டை துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தொடக்கி வைத்தார். அவ்விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, “யோகாவுக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
துரதிருஷ்டவசமாக சிலர் பழமையான அறிவியல் முறையான யோகாவை மதத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். இவ்வாறு செய்பவர்கள் மனித இனத்துக்கு மிகப்பெரும் தீங்கை செய்கிறார்கள். அனைத்து விதமான உடற்பயிற்சிகளுக்கும் தாய் போன்றது யோகா. தேக ஆரோக்கியம், மன நலன் ஆகியவை யோகா மூலம் கிடைக்கிறது. மருத்துவ செலவுகளையும் யோகா குறைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)