ஏற்றுமதியாளர்களுக்கு ஈ வாலட்: அருண் ஜெட்லி அறிவிப்பு
Posted: Fri,06 Oct 2017 04:58:24 GMT
டெல்லியில் நடைபெற்ற 22-வது ஜிஎஸ்டி கலந்தாய்வு கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இக்கலந்தாய்வு கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெட்லி, “. இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகருக்கான உச்ச வரம்பு ரூ. 75 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வணிகம் புரிவோர் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யலாம். ஏற்றுமதியாளர்கள் முன்கூட்டியே செலுத்திய வரி அக்.10-ம் தேதியிலிருந்து திரும்ப வழங்கப்படும். 2018 ஏப். 1 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு ஈ-வாலட் சேவை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)