ரஹானேவுக்காக குரல் கொடுக்கும் கவாஸ்கர்
Posted: Fri,06 Oct 2017 04:57:46 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை அடுத்து 20 - 20 போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை தொடங்கும் 20-20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே சேர்க்கப்படவில்லை.
இது குறித்து விமர்சித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், “ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரில், ரஹானே தொடர்ந்து நான்கு அரை சதம் அடித்து சிறப்பாக ஆடினார். அவரை 20 ஓவர் போட்டியில் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை. ஒரு நாள் போட்டிகளில், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. 20 ஓவர் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று தேர்வாளர்கள் சொல்லலாம். பிறகு ஏன் அவருக்கு ஒரு நாள் போட்டியில் இடம் கொடுக்கவில்லை? அவரை அணியில் சேர்த்துள்ள போது, ரஹானேவை ஏன் நீக்க வேண்டும்?
நல்ல பார்மில் இருக்கும் வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், மனரீதியாக அவர் பாதிக்கப்படுவார். ஆட்டத்திறனும் பாதிக்கப்படும். இதை தேர்வுக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)