பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுனர் கவலை
Posted: Wed,04 Oct 2017 03:32:05 GMT
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என பல விதங்களில் மக்களை வாட்டி வதைத்து வரும் மத்திய அரசு, தாங்கள் ஏதோ பொருளாதாரத்தில் சாதனை படைத்துவிட்டதாக கூறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தலைவர், நாட்டி பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.
வட்டி விகித குறைப்பு குறித்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் படேல், “வங்கிகளுக்கான குறைந்த கால வட்டி 6 சதவீதமாக நீடிக்கும். ரிவர்ஸ் ரெபோ ரெட் 5.75 சதவீதமாக இருக்கும். 2017 ன் 2வது காலாண்டில், பணவீக்கமானது தற்போது இருப்பதை விட அதிகரித்து 4.2 சதவீதம் முதல் 4.6 சதவீதம் வரை இருக்கும். பொருளாதார வளர்ச்சி முன்னர் கணிக்கப்பட்ட 7.3 சதவீதத்தை விட 6.7 சதவீதமாக குறையும். ஜிஎஸ்டி தொடர்பான பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும். முதல் காலாண்டில் உற்பத்தி துறை பலவீனமடைந்துள்ளது எங்களை கவலையடைய செய்துள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)