5வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி
Posted: Mon,02 Oct 2017 08:59:25 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நாக்பூரில் நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 42.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை கைப்பற்றியுள்ளது.
  • Share
  • 0 Comment(s)