மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமாகிறது
Posted: Thu,28 Sep 2017 09:12:59 GMT
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலி ராஜின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாக உள்ளது.
தோனி, சச்சின், அசாருதீன் ஆகியோரின் வாழ்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்துள்ளது. முன்னாள் கேப்டன் கபில்தேவின் படமும் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் மிதாலி ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வியாகம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராவது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மித்தாலி ராஜ், “வியாகாம் 18 பிக்சர்ஸ் உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் பல பெண்களுக்கு உந்துதலாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)