பங்குச்சந்தை தொடர் சரிவு
Posted: Wed,27 Sep 2017 12:16:38 GMT
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது, பங்குச்சந்தையில் எதிரொலித்து வருகிறது.
இன்று காலை சற்று நேரம் உயர்வில் இருந்து சந்தை அதன் பிறகு தொடர் சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
ஆசிய பங்குச்சந்தைகளின் சரிவு, முன்னணி நிறுவன பங்குகள் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் இன்றைய பங்கு வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 439.95 புள்ளிகள் சரிந்து 31,159.81-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 135.75 புள்ளிகள் சரிந்து 9,735.78-ஆகவும் முடிந்தன.
  • Share
  • 0 Comment(s)