Posted: Sat,23 Sep 2017 09:58:22 GMT
பூமி ஆறாவது முறையாக பேரழிவை சந்திக்கவிருக்கிறது என அமெரிக்காவை சேர்ந்த கணித மேதை டேனியல் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளால் 2010ம் ஆண்டுக்குள் பூமி அழியும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜுராஸிக், க்ரட்டாசியஸ் என இதுவரை 5 காலகட்டத்தில் பூமி பேரழிவை சந்தித்துள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாக மனிதனால் பூமி அழியப்போகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“2100 ம் ஆண்டில் 310 முதல் 500 ஜிகாடன் கார்பன்கள் கடலில் கலக்கும். இவைகள் கடல்வாழ் உயிரினங்களையும், தொடர்ந்து மற்ற உயிரினங்களையும் அழிக்கும். 19 ம் நூற்றாண்டு முதல் நவீன உலகின் வளர்ச்சியால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக 6வது முறையாக உலகம் அழிவை சந்திக்க உள்ளது” என்று டேனியல் எச்சரித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this