உள்நாட்டு உற்பத்தி சரிவு
Posted: Thu,21 Sep 2017 10:14:51 GMT
பாஜக அரசு, பொருளாதாரா ரீதியில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வந்தாலும், உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து குறைந்துவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த காலாண்டில், 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில்லரை விலை அடிப் படையிலான, பணவீக்க விகிதம்,மத்திய அரசின் இலக்கான, 4 சதவீதத்துக்குள் கட்டுபடுத்தபட்டு உள்ளது. மழைக்காலத்தில், காய்களின் விலை உயர்ந்தது. அந்த சமயத்திலும், 3.6 சதவீதமாகவே, பணவீக்க விகிதம் இருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; இதை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமருடன் கலந்தா லோசித்து, கூடுதல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். ” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)