இளையராஜா இசையில் பாடும் ஜிவி பிரகாஷ்
Posted: Sat,12 Aug 2017 05:19:32 GMT
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் நாச்சியார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
பாலா படங்களிலேயே மிகக்குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம்.
இப்படத்தில் இசைஞானியின் இசையில் ஜிவி பிரகாஷ் ஒரு பாடல் பாட உள்ளாராம். இளையராஜா இசையில் பாடப்போவது குறித்தும், பால இயக்கத்தில் நடித்தது குறித்தும் தெரிவித்திருக்கும் ஜிவி பிரகாஷ், “நாச்சியார் படத்தில் இளையராஜாவின் இசையில் நானும் ஒரு பாடல் பாட இருக்கிறேன். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பொதுவாக பாலா படம் என்றாலே ஹீரோவின் தோற்றம் எல்லாம் மாறிவிடும். எனக்கும் அப்படி தான். பாலா படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)