”அஜீத்துடன் நடிக்க ஆசை”, அமலாபால் பேட்டி
Posted: Sat,12 Aug 2017 05:18:45 GMT
திருமணத்துக்குப் பிறகு நல்ல பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த அமலாபால், விவாகரத்துக்குபின் அதிரடியாக களமிறங்கியுள்ளார். பல்வேறு வகையான பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பத்திரிக்கை பேட்டி ஒன்றில், “விக்ரம், விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டேன். அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில காரணங்களால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன், விரைவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்
அதே போல் வடசென்னை வாய்ப்பை தவறவிட்டது குறித்து கூறியிருக்கும் அவர், “வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் தேதி பிரச்னையால் நடிக்க முடியவில்லை. அவர்கூட கண்டிப்பாக ஒரு படம் பண்ண வேண்டும். கவுதம்மேனன், மணி சார், ராஜமவுலி படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)