சமந்தா திருமண அழைப்பிதழ் தயார்
Posted: Sat,12 Aug 2017 05:18:11 GMT
சமந்தா – நாகசைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழ்கள் தயாராகிவிட்ட நிலையில், சமந்தா மற்றும் நாகசைதன்யா தரப்பில் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
கோவாவில் உள்ள வாகாடர் கடற்கரையில் அமைந்துள்ள டபிள்யூ ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளதாக இந்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யாவின் குடும்ப வழக்கப்படி இந்து முறையிலும், சமந்தா இல்லத்தாரின் கிருஸ்தவ முறைப்படியும் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.
இது தவிர ஐதராபாத்தில் மிகப்பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாம். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி இரண்டிலும் பல்வேறு கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
  • Share
  • 0 Comment(s)