”நயன்தாரா யார் கூட நடித்தாலும் நன்றாக இருக்கும்”, சொல்கிறார் மோகன்ராஜா
Posted: Sat,12 Aug 2017 05:17:38 GMT
சிவகார்த்திகேயன், நயன் தாரா நடிப்பில் வேலைக்காரன் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ராஜா. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் விளம்பரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது படக்குழு. அதில் ஒரு பகுதியாக படம் பற்றி பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்து வருகிறார் இயக்குனர்.
சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக நயன்தாரா செட் ஆவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மோகன்ராஜா, “நயன்தாரா, யாருடன் ஜோடியாக நடித்தாலும், ஒர்க் அவுட்டாகும். அந்த அளவுக்கு, நடிப்பில் அசத்தி விடுவார். ஜெய், விஜய் சேதுபதி ஆகியோருடன், நயன்தாரா நடித்த போதும், இது போல் தான் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அந்த படங்கள், ஹிட் அடித்தன. அதே போல் தான், இந்த படமும் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளதால், கேரளாவில் மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவிலும் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்களாம்.
  • Share
  • 0 Comment(s)