கமல் 58: கொண்டாடும் ரசிகர்கள்
Posted: Sat,12 Aug 2017 05:17:06 GMT
58 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன். இன்றுடன் திரையுலகில் அவருக்கு 58 வயதாகிறது. இதை முன்னிட்டு கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
கமல்58 என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்துள்ளனர். அத்துடன் கமல்ஹாசன் நடித்த படங்களில் போஸ்டர்களை பகிர்ந்தும், பழைய போஸ்டர்களை தங்கள் விருப்பப்படி வாழ்த்து செய்திகளை பதிவிட்டு மறு உருவாக்கம் செய்தும் பதிவிட்டு வருகிறார்கள்.
  • Share
  • 0 Comment(s)