பெண்களை பிந்தொடர்வது குறித்த கேள்விக்கு ஆண்ட்ரியாவின் பதில்
Posted: Sat,12 Aug 2017 04:04:46 GMT
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் தரமணி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டியில், பெண்களை பின் தொடர்வது குறித்து தமிழ் திரைப்படங்களில் உயர்வாக காட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஆண்ட்ரியா, “ஒரு திரைப்படம் சமூக அறிவியல் பாடமல்ல. அதை ஏன் ஒரு படமாக மட்டும் பார்க்கக் கூடாது? நம் பெற்றோர் தலைமுறையில், மொபைல் போன்கள் இல்லாதபோது, ஒரு ஆண் பெண்ணை தொடர்வதிலிருந்துதான் பல காதல் கதைகள் ஆரம்பமாயின. அவர்களுக்கு அதுதான் நிஜம்.
தற்போது அனைத்துக்கும் இங்கு இடமுள்ளது என நினைக்கிறேன். தனது காதலியின் ஆண் நண்பர்கள் மீது பொறாமை கொண்டு பேசும் ஆண்களிலிருந்து, காதலி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்யும் ஆண்களும் இருக்கிறார்கள். பின் தொடர்தலும் அப்படித்தான்.
கள்ளம் இல்லாமல் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் மட்டும் பின் தொடர்தலிலிருந்து, அவளது முகத்தில் அமிலம் வீசுபவர்கள் வரை பலர் இருக்கிறார்கள். எல்லாமே பின் தொடர்தலை உயர்வாகக் காட்டுவதாக ஆகாது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)