பாராட்டுக்களை குவிக்கும் பொதுவாக எம்மனது தங்கம்
Posted: Sat,12 Aug 2017 04:04:14 GMT
புதுமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் நேற்று வெளியான படம் பொதுவாக எம்மனது தங்கம். ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
தேனாண்டாள் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அபிராமி மெகாமால் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளது பொதுவாக எம்மனசு தங்கம்.
நகரம், கிராமம் என எல்லா பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் 60 லட்சங்களையும், தமிழ்நாடு முழுவதுமாக சேர்த்து ஒரு கோடியே 75 லட்சங்களையும் வசூல் செய்துய்ள்ளது.
  • Share
  • 0 Comment(s)