விமர்சகர்கள் பாராட்டும் தரமணி
Posted: Sat,12 Aug 2017 04:03:33 GMT
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, நடிப்பில் ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்பரேசன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் தரமணி. சென்னையில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் படம் என்றாலும், அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தும் விதமாக அமைந்திருக்கிறது தரமணி.
நேற்று வெளியான மூன்று படங்களில் விமர்சகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. சென்னையில் இப்படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல் கோவை, மதுரை போன்ற மற்ற நகரங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் 41 லட்சங்களை வசூல் செய்துள்ள இப்படம், தமிழகம் முழுவதுமாக சேர்த்து 95 லட்சங்களை முதல் நாளில் வசூல் செய்துள்ளது. வாய்மொழி பரவல் நன்றாக இருப்பதால் வரும் நாட்களில் நகர்ப்புறங்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share
  • 0 Comment(s)