கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்
Posted: Sat,12 Aug 2017 04:02:32 GMT
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை கையாளும் திறமை கௌதம் மேனனுக்கே உண்டு. அச்சம் என்பது மடமையடா ஆரம்பித்த போதே, என்னையறிந்தால் படத்தையும் தொடங்கினார். அதே போல் அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்ட ஆகிய இருபடங்களுக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தினார். தற்போது துருவ நட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த படத்தின் பணிகளையும் ஒருபுறம் ஆரம்பித்துவிட்டார். மாநகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நடிப்பில் அடுத்த படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார் கௌதம் மேனன். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவிருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
நடிகர் சந்தீப் கிஷன் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Share
  • 0 Comment(s)